Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 29 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள முப்படைகளின் தலைமையகத்துக்கு சனிக்கிழமை(28) விஜயம் செய்த பிரதமருக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (27) விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கான பாதுகாப்பினை பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரும், பொலிஸ் விசேட அதிரடி படையினரும் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை (28) உயர் பாதுக்காப்பு வலயத்திலுள்ள இராணுவ படைத்தலைமையகம், விமானப்படை தலைமையகம் மற்றும் கடற்படை தலைமையகம், என்பவற்றுக்கு சென்று முப்படைகளின் வீரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள முப்படைகளின் தலைமையகத்தின் உள்ளும் விசேட அதிரடிப் படையினரே பிரதமருக்கான பாதுக்காப்பை வழங்கினர்.
யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை வெள்ளிக்கிழமை (28) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தவேளை, எதற்காக இவ்வளவு பாதுக்காப்பு ஏற்பாடுகள் என பிரதமரிடம் ஆயர் வினாவினார். அதற்கு பிரதமர் பதில் அளிக்காது சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago