2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

6 அடி நீள முதலை பிடிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, 1ஆம் கட்டைப் பகுதியிலிருந்து 6 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை பிடிக்கப்பட்டதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முதலையொன்றின் நடமாட்டம் இருந்துள்ளது. சனிக்கிழமை (29) அவ்வீதியால் நடந்து சென்ற முதியவர் ஒருவர், வீதியில் கிடந்த முதலையால் தடக்கி வீழ்ந்துள்ளார்.

முதலையின் ஆபத்தை உணர்ந்த பொதுமக்கள், ஒன்றிணைந்து முதலையைப் பிடித்து வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கிளிநொச்சி வனஜீவராசி திணைக்களத்திடம் முதலையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X