2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

252 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 30 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்தைச் சேர்ந்த 252 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனக் கடிதங்களை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில்; வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்  வழங்கினார்.

ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு அதில் சித்தியடைந்தவர்கள், நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கணித பாடத்துக்கு 57 பேரும் விஞ்ஞான பாடத்துக்கு 69 பேரும் ஆங்கில பாடத்துக்கு 67 பேரும் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கு 24 பேரும் விவசாய பாடத்துக்கு 35 பேரும் என 252 பேர் நியமனம் பெற்றனர்.

நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்  உள்ளிட்ட பலர்; கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X