2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் விஜயம் குறித்து சி.வி.க்கு அறிவிக்கவில்லை: சி.வி.கே

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே அந்நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்றும் வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

இது தொடர்பில் தமிழ்மிரருக்கு மேலும் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், 'அரசாங்கத்துக்கும் வட மாகாணசபைக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாத தற்போதைய காலச்சூழ்நிலையில், பிரதமரின் வடக்குக்கான விஜயத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஏன் அழைக்கவில்லை என்பது கேள்விக்குரியதே' என்றார். 

'இவ்வாறு அவரை அழைக்காமல் இருந்ததற்கு காரணம் தெரியவில்லை. அதேசமயம், இதை பாரிய பிரச்சினையாக்க வேண்டிய அவசியமும் இல்லை. எவ்வாறெனினும், பிரதேசத்துக்கு பிரதமரொருவர் விஜயம் செய்வாராயின் அந்த விஜயம் தொடர்பில் முதலமைச்சர்களுக்கு அறிவிக்கப்படுவதே வழமை. இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு அதிகாரியும் அறிவிக்கவில்லை' என்றும் அவைத் தலைவர் மேலும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X