2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பல்கலை மாணவனின் துண்டாடப்பட்ட கையின் பெருவிரல் மாத்திரம் இயங்குகிறது

Menaka Mookandi   / 2015 மே 08 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். செல்லமுத்து மைதானத்தில் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மணிக்கட்டுடன் கையை இழந்த மாணவனின் கை பொருத்தப்பட்டுள்ளதுடன், அதில் பெரு விரலில் மாத்திரம் தற்போது உணர்ச்சியுள்ளதாக காணப்படுகின்றதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றைய 4 விரல்களும் உணர்ச்சி வருவதற்கான சந்தர்ப்பம் குறித்து பதில் கூறுவதற்கு 1 மாதகாலம் செல்லும் எனவும் அதுவரையில் மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளது எனவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டியில் வவுனியாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டது. மேலும் இரு மாணவர்களும் படுகாயமடைந்தனர்.

வெட்டப்பட்ட கை மற்றும் மாணவன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .