2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

19 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2015 மே 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் 19 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (08) கைது செய்ததாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் பிரிவு 2க்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.

இராணுவத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுப்பர் மடத்திலுள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சாவும் மீட்கப்பட்டது. சந்தேகநபர் கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் பொருட்டு பொதியிட்டுக்கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு கஞ்சாவை வழங்கிய நபரை தேடி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட கஞ்சா 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பெறுமதியானது என பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .