2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Thipaan   / 2015 மே 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 
வடமாகாணத்தில் கடந்த 180 நாட்களில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 03க்காக புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ் கோப்பாய் தேசியக்கல்வியற் கல்லூரியில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

வடமாகாண கல்வி பண்பாட்லுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஐh தலைமையில்   நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், கலந்து கொண்டு 560 ஆசிரியர்களுக்கான நியமனமக் கடிதங்களை வழங்கிவைத்தார்.
 
இதில் தேசிய கல்லூரி ஆசிரியர்களாக 161 பேரும், உதவி ஆசிரியார்களாக 343 பேரும்  பாடசாலை பணியாளர்களாக 41 பேரும் வேலை மேற்பார்வையாளராக 15 பேரும் நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
 
இதில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .