2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு: இருவர் கைது

Kogilavani   / 2015 மே 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலை காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) காலை சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துகொலை செய்யப்பட்டிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்படையதாக கூறப்படும் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் அக்கராயன் பொலிஸார் கூறினர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (வயது 48) என்பவரே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

காட்டுப்பகுதிக்குச் சென்ற சிலர் சடலத்தை கண்டு அக்கராயன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமனெ பொலிஸார் சந்தேகிப்பதுடன் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைவாக இருவரை கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .