2025 ஜூலை 09, புதன்கிழமை

பரந்தனில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பஸ் சேவை

Sudharshini   / 2015 மே 11 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தனிலிருந்து காஞ்சிபுரம் கிராமத்துக்கான பஸ் சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் தெரிவித்தார்.

பரந்தன் சந்தியிலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காஞ்சிபுரம் கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.இதேவேளை, காஞ்சிபுரம் பகுதியிலுள்ள மாணவர்கள் பரந்தன இந்து மகா வித்தியாலயத்துக்கு நடந்து சென்று கல்வி கற்ற வேண்டியிருந்தது.

இக்கிராமத்துக்கான போக்குவரத்து சேவையை பெற்றுதருமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் போக்குவரத்துச் சாலையை கேட்டுக்கொண்டதுக்கிணங்க, இந்த போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்சேவை காலை, மாலை என இருவேளைகள் பாடசாலை மாணவர்களை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முகாமையாளர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .