Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 12 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
வடமாகாண சபையின் 3 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்பட்ட நெல்லியடி பஸ் நிலையத்தின் கட்டடப் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால், விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக கரவெட்டிப் பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.
வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் 2 மில்லியன் ரூபாய், முதலமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட 1 மில்லியன் ரூபாய் என மொத்தம் 3 மில்லியன் ரூபாய் நிதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மலசலகூடம், தேநீர் கடை உள்ளிட்டவை உள்ளடங்கலாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தேநீர்க்கடை குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago