Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 17 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கழிவு எண்ணெய் கசிவு ஏற்பட்ட கிணறுகளை தொடர்ந்தும் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுமாறு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளின் சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.தேவநேசன் பணித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளாக உடுவில், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் கோப்பாய் ஆகிய பிரிவுகளுக்கே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்பதுடன், குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு தடவை நீர் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை பெறப்படவேண்டும் எனக்கூறியுள்ளார்.
இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கான செலவுகளை பாதிக்கப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள பிரதேச சபைகளிடம் பெற்று கலந்துரையாடி பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையில் 3 தொடக்கம் 5 வருடங்களுக்கு மேற்கொள்ளுமாறும், இது தொடர்பில் இனிவருங் காலங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்த கடிதம் அனுப்பப்பட்டமை தொடர்பில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.தேவநேசனுடன் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் கொழும்பு சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், பிரதிப் பணிப்பாளர் இது தொடர்பில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
6 minute ago
23 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
30 minute ago
35 minute ago