2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

37 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன்

பூநகரி பகுதியில் 37 கிலோகிராம் நிறையுடைய 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கேரள கஞ்சா நேற்று (17) இரவு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய  பூநகரி  சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்துக்கு பழைய இரும்பு, பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .