Janu / 2024 மார்ச் 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளதுடன் மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இது தொடர்பில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் .
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் பணத்தினை இளைஞனிடம் மீள் அளித்துள்ளார் .
அதனையடுத்து பெண்ணை 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
எம்.றொசாந்த்
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025