Princiya Dixci / 2016 ஜூலை 26 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு நகரில் இரண்டு களஞ்சிய அறைகளில் வர்த்தகர் ஒருவர் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த வெடி மருந்துப் பொருட்கள், கம்பஹா மாவட்ட உதவி வெடி மருந்துப் பொருள் கட்டுப்பாட்டாளர் வி.டி.விஜேதுங்க முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) மாலை சோதனை செய்யப்பட்டது.
சோதனை நடவடிக்கையின் போது இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்ட பொற்றாசியம் பேர்க்;லொறேட் என்ற வெடி மருந்துப்பொருள் 800 கிலோகிராம், வெடி மருந்து பொருட்கள் 120 கிலோகிராம் மற்றும் வெற்று பரல்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்ட வெடி மருந்துப் பொருட்கள், வெடித்திருக்குமாயின் களஞ்சியப்பட்டுத்தப்பட்ட கட்டடத் தொகுதி முற்றாக நாசமாகியிருக்கும் எனவும் தீயினால் அருகில் உள்ள கடைகள் பல தேசமடைந்திருக்கும் எனவும் மாவட்ட உதவி வெடி மருந்துப்பொருள் கட்டுப்பாட்டாளர் வி.டி.விஜேதுங்க தெரிவித்தார்.
வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நீர்கொழும்பு பிராந்தியத்துக்கு பொறுப்பான சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பாக சமிந்த என்ற வர்த்தகரைக் கடந்த சனிக்கிழமை (24) கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரினால் டி குரூஸ் வீதியில் வெடிப்பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகள் இரண்டு பின்னர் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கமகே ஆகியோரின் ஆலோசனையின் கீழ் சட்டத்தை நிலை நிறுத்தும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைதுக் செய்துள்ளனர்.
30 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago