2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வுகள்

Niroshini   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் வகுப்பறை கட்டட மேல் மாடி அமைப்புக்கைளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள், இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை, காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றன.

நிறைவு பெறாமல் இருக்கின்ற இந்த  கட்டடத்தின் இறுதி கட்ட நிர்மாண பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி 05 இலட்சம் ரூபாய்  நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

கல்லூரி முதல்வரும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (மதனி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் அறக்கட்டளை நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கட்டடத்தின் ஆரம்ப நிலை வேலைத்திட்டங்கள் சவூதி நாட்டின் நிதி உதவியினால் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு  கைத்தொழில் வர்த்தகதுறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் 12 இலட்சம் ரூபாய் செலவில் இந்தக் கட்டத்தை மாடி கட்டடமாக மாற்றியப்பதற்கான  அத்திவாரம் இடப்பட்டு, புத்தளம் நகரின் பிரபல ஆங்கில ஆசிரியர் மர்ஹூம் ஹலீல் ஓமான் நாட்டில் சில காலம் ஆங்கிலம் கற்று கொடுத்த வேளை, அவரிடம் நன்கு ஆங்கிலம் பயின்று பட்டம் பெற்ற அந்த நாட்டு சகோதரர்களால் மர்ஹூம் ஹலீல் ஆசிரியர் அவர்களின் ஞாபகார்த்தமாக மேல் மாடி கட்டடமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் இறுதிக்கட்ட வேலைகளுக்காவே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி இந்த 05 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X