Princiya Dixci / 2016 நவம்பர் 28 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன், ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
புத்தளம், நியூ செட்லிமெண்ட் பாதையின் ஒரு கிலோ மீட்டர் தூரம் கார்பட் பாதையாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
இந்த அங்குராப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஐ.எம். இல்யாஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மத்திய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026