Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மங்களஎளிய சமுர்த்தி வங்கியின் கீழான கணமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு, கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், சனிக்கிழமை இடம்பெற்றது.
கணமூலை தெற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ரஸ்மின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், லதீப் மாவத்தை, கணமூலை, மிஹ்ராஜ்புரம் சமுர்த்தி மக்கள் அடிப்படைச் சங்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமுர்த்திப் பயனாளிகள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு வாரங்களையொட்டி, கணமூலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள லதீப் மாவத்தை, கணமூலை, மிஹ்ராஜ்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து சேமிக்கப்பட்ட பணத்தில் இருந்தே, குறித்த அப்பியாசக் கொப்பிகள் கொள்வனவு செய்யப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
முந்தல் பிரதேச செயலாளர் சீ.எம்.பிரேமசூரியவின் ஆலோசனைக்கு அமைய, முந்தல் பிரதேச சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கிங்ஸ்லி டேவிட்டின் முயற்சியில், குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
48 minute ago
59 minute ago