2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அம்பியுலன்ஸ் வண்டிகள் அவசர தேவைகளுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன

Niroshini   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்துக்கு  அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்ட  நவீன வசதிகளுடன் கூடிய  அம்பியுலன்ஸ் வண்டிகள், தென் மாகாணத்திலும் மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸ் நிலையங்களிலும்  பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக  இந்த சேவையின் பிராந்திய முகாமையாளர் கயான் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் இந்த சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார அமைச்சினால் 'சுவ செரிய' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த  இலவச அம்பியுலன்ஸ் வண்டிச்  சேவையை மேல் மாகாணம் மற்றும்  தென் மாகாணத்தில் வசிக்கும் எவரும் அவசர தேவையின்போது 1990 என்ற இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி 24 மணி நேரமும்  பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக ஆபத்தான நிலையில்  உள்ள நோயாளிகளை அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, விபத்துக்களின்போது காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

1990 என்ற இலக்கத்துக்கு எடுக்கப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு கட்டணம்  அறவிடப்படமாட்டாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X