Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், அருவக்காறு கழிவகற்றல் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, இவ்வருடம் 2,000 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன், வீதிகளின் இருபுறமும் கழிவுகளை வீசுதல் தொடர்பான நாளாந்த அறிக்கையை வழங்குமாறும், சுற்றாடல் பொலிஸாருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (14) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்படி ஆலோசனையை வழங்கினார்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் அலுவலர்களிடம், ஜனாதிபதி வினவினார்.
கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் மக்களைத் தெளிவுபடுத்துவதற்காக விரிவான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், அலுவலர்களுக்கு, ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாராச்சி, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேல் மாகாண பிரதம செயலாளர் தயா செனரத் ஆகியோரும் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago