Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பகுதியில், ஏழு மாதக் கைக்குழந்தையொன்றின் தாயான தனது மனைவியை எரித்துக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கணவர், கைதுசெய்யப்பட்டாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 14ஆம் திகதி வரை அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய முஹம்மது தமீம் ஷாமிலா என்ற பெண், மே மாதம் 5ஆம் திகதி, அவரது கணவரினால் கட்டி வைத்து தீ மூட்டப்பட்டிருந்தார்.
எனினும், தீயில் எரிந்துகொண்டிருந்த குறித்த பெண்ணின் கூக்குரல் கேட்டு, அவ்விடத்துக்குச் சென்ற அயலவர்கள், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த பெண்ணை மீட்டு, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பெண், புத்தளம் தள மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மே மாதம் 20ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மனைவியை தீமூட்டி எரித்ததாகக் கூறப்படும் கணவன், தலைமறைவாகிய நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷாமிலாவின் கணவரைக் கைதுசெய்யுமாறு, புத்தளம் நகரில் பல்வேறு சமூக அமைப்புகளினாலும் பெண்களாலும் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
2 hours ago