எம்.யூ.எம். சனூன் / 2017 ஜூன் 19 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பாடசாலை மாணவர்கள், அரபு மத்ரஸாக்களின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையிலான ஒளிக்கீற்று இஸ்லாமியப் போட்டிகள், கற்பிட்டி ரஹ்மானியா அரபுக் கல்லூரியில், சனிக்கிழமை (17) இடம்பெற்றன.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒளிக்கீற்று இஸ்லாமியப் போட்டிகளை, கற்பிட்டி ரஹ்மானியா அரபுக் கல்லூரி அதிபரும் ஆசிரியர்களும் நடத்தி வைத்தனர்.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி), இப்போட்டிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டலை வழங்கியிருந்தார்.
அல் கிராஅத், அதான், சூரா மனனம், கஸீதா, பேச்சு, வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொணடனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள், கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில், இப்தார் நிகழ்வுடன் நாளை (20) மாலை இடம்பெறவுள்ளன.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025