2025 மே 05, திங்கட்கிழமை

உடப்புக்கு இராதாகிருஷ்ணன் விஜயம்

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம்.எச்.எம்.நவாவியின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன்,  எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உடப்பு தமிழ்க் கிராமத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது,  உடப்பு இந்து ஆலய பரிபாலன சபையினரால் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட பூஜை ஒன்றில் கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்துகொள்வார்.

அத்துடன், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

மேலும், உடப்பு கிராமத்தில் காணப்படும் கல்வி சம்பந்தான குறைபாடுகள், பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஆராய்வதுடன், ஊரின் அபிவிருத்தி தொடர்பிலும் ஆராயவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X