2025 மே 05, திங்கட்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Princiya Dixci   / 2017 மே 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தாந்தீவு, ஐந்து ஏக்கர் கிராமத்தில், கத்திக்குத்துக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த சாகர தில்ஷான் (வயது 21)  என்பவரே உயிரிழந்துள்ளார் என்று, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கு இடையே நிலவிவந்த நீண்டகாலப் பகை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தின் போது, கத்திக்குத்துக்கு இலக்காகியவரை, பலத்த காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்தே, அவர் உயிரிழந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மற்றைய இளைஞன், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X