Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 14 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை கூட்டாக இணைந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்கா தெரிவித்தார்.
கற்பிட்டி பிரதேச சபை பிரிவில், சில பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ள நிலையில், அனைத்துப் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை அதிகாரிகள், பொலிஸார், கற்பிட்டி, முந்தல் பிரதேச செயலக நிர்வாக கிராம அதிகாரிகள், விவசாய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்ட ஆரம்ப கட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று, நுரைச்சோலையில் அமைந்துள்ள பிரதேச சபையின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே இவ்வாறு அனைத்துப் பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் அரச அதிகாரிகள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், கடற்படையினர், தொண்டர் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளனர்.
வீடுகள், வீட்டுச் சூழலைப் சோதனை செய்தல், சிரமதானப் பணிகளைச் செய்தல், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல் மற்றும் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .