2025 மே 05, திங்கட்கிழமை

காட்டு யானைக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்

தனியார் காணியொன்றில் காட்டு யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மினசார வேலியில் பெண்கள் இருவர் சிக்கி, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்கம பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3.25க்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த இந்திராணி மெனிக்கே (வயது 50) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மின்சாரத் தாக்குதலுக்குள்ளான மற்றைய பெண் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று (17) இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X