2025 மே 05, திங்கட்கிழமை

தபால் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் வட்டக்கண்டல் ரெட்பானா பிரதேசத்தில் புதிய தபால் நிலையத்துக்கான அடிக்கல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த பிரதேசத்தில் வதியும் பொதுமக்கள் பல காலமாகத் தபால் நிலையமொன்று இல்லாதநிலையில், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், தமது பிரதேசத்துக்கு புதிய தபால் நிலையம் ஒன்றினை அமைத்து தருமாறு, பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து தொகை நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி உள்ளிட்ட ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X