2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

திருமணத்துக்குச் சென்றோர் விபத்தில் சிக்கினர்; நால்வர் காயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புழுதிவயல் பிரதேசத்தில், முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன், முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புழுதிவயல் கரம்பை பிரதான வீதியில், ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விருதோடை கஜூவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்டவர்களை, உழுக்காப்பள்ளம் பிரதேசத்தில் விட்டுவரச் சென்ற போதே, இந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டையிழந்து, வீதியை விட்டு விலகி, குடைசாய்ற்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அங்கு வந்து அயலவர்கள், முச்சக்கர வண்டியில் இருந்தவர்களை மீட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X