2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘நிறுவனம் செயற்றிறன் அற்றுப்போகும்’

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 20 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள், அதன் நிர்வாகிகளன்றி, அங்கு பணியாற்றும் ஊழியர்களே. ஊழியர்கள், தமது பொறுப்புக்களை உரியவாறு செய்யாது போனால், அந்நிறுவனம் செயற்றிறன் அற்றுப் போவதைத் தடுப்பதற்கு, எந்த நிர்வாகிகளாலும் முடியாது போகுமென, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் ஆசிரி ஹேரத் தெரிவித்தார்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் 25 வருடங்கள் நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்ட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அரசாங்கம் மாறுகின்ற போது நிர்வாகங்களும் மாற்றமடைவது இயல்பானது. நிர்வாகிகள் என்போர் அரசியல் நியமனங்களைப் பெற்று வருவோராவர். எனினும், ஊழியர்கள் அவ்வாறில்லை. அவர்கள்தான் தமது வியர்வையை, உழைப்பை அர்ப்பணிப்புச் செய்து, தமது நிறுவனத்துக்காகச் செயற்படும் தரப்பினராவர்.

“சிலாபம் பெருந்தோட்ட நிறுவன ஊழியர்களின் அர்ப்பணிப்பினால்தான் இந்நிறுவனம் இன்று இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருக்கின்றது. தற்போது சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், அரச திறைசேரிக்கும் நிதியியை வழங்குகின்றது என்பதை, நாம் மறந்து விடக்கூடாது. கடந்த காலங்களில் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு இருண்ட யுகமொன்று இருந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

“எனினும், இனி ஒரு போதும் இந்நிறுவனத்தில் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே, இந்நிறுவனப் பணிப்பாளர் சபையின் நோக்கமாக உள்ளது. இதற்காக இங்கு பணியாற்றும் ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X