2025 மே 05, திங்கட்கிழமை

நுரைச்சோலைக்கு ரஞ்சித் விஜயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

நுரைச்சோலை, நிலக்கரி மின் நிலையத்திலுள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த இயந்திரம் செயலிழந்துள்ளது. அது தொடர்பாக நேரில் கண்டறிவதற்காக மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நுரைச்சோலை மின் நிலையத்துக்கு, இன்றுக் காலை விஜயம் செய்தார்.  

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் 6.10 மணிக்கு செயலிழந்தது. அந்த இயந்திரத்தின் பொய்லருடன் தொடர்பான நீர் ஆவியாகுதல் குழாய் தொகுதியில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாகவே குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளது.   

இந்த இயந்திரத்தினை திருத்தம் செய்வதற்காக நீர் ஆவியாகுதல் குழாய் தொகுதி குளிர் நிலைக்கு வர வேண்டும். இதற்காக சுமார் மூன்று நாட்கள் தேவைப்படலாம். அதனைத் தொடர்ந்து திருத்தப்பணிகள் அவசரமாக மேற் கொள்ளப்படவுள்ளன என்று, தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X