2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பண மோசடி: இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஜூன் 05 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஈஸி காஸ்” மூலம் 120,000 ரூபாய் பண மோடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தளம், பாலாவி, கரம்பப் பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞர்கள் இருவரும், கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, வாடகை வீடொன்றில் தலைமறைவாக இருந்த போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 8 அலைபேசிகளும் 18 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X