2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'புதிய அரசியலமைப்புக்கு புதிய உள்ளீர்ப்புகள் உள்ளன’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில், புதிய அரசியல் அமைப்பு தொடர்பான திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

அநுராதபுரத்தில், ​நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர், அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“அரசியலமைப்பு தொடர்பான திருத்தத்தில், புதிதாக சில விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டு வருகின்றன.

“இதன்படி, பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் நிக்காயக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் திருத்தங்களும் கொண்டு வரப்படவுள்ளன. பௌத்த மதத்துக்கு  எதிரான ஓர் அரசாங்கம், எதிர்காலத்தில் இலங்கையில் அமையுமாயின், அப்போது பௌத்த மதத்தின் பாதுகாப்பானது கேள்விக்குறியானதாக அமைந்து விடும்.

“எனவே, பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். இந்தப் புதிய திருத்தச் சட்டத்தின் மூலமாக, பௌத்த மதத்தின் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படும்.

“இதேவேளை, அரசாங்கத்துக்கோ அல்லது மத நிறுவனம் ஒன்றுக்கோ, அரசியல் அமைப்பின் உள்ளடக்கங்களை மாற்ற முடியாத சரத்தொன்றும் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X