Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 26 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித ரமழான் நோன்பை பூர்த்தி செய்து, இன்று திங்கட்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதென கொழும்பு பெரியபள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு அறிவித்திருந்த நிலையில், புத்தளத்தில் சில இடங்களில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை நேற்று இடம்பெற்றது.
புத்தளம் மற்றும் விருதோடை ஆகிய பகுதிகளில் நோன்புப் பெருநாள் தொழுகைகள் திறந்த மைதானங்களில் இடம்பெற்றன.
புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்ற பெருநாள் குத்பா உரையை அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.அர்ஹம் (இஹ்சானி) நகழ்த்தியதுடன், தொழுகையையும் நடத்தினார்.
இதேவேளை, மதுரங்குளி விருதோடை எள்ளுச்சேனை வெள்ளைப்புறா மைதானத்திலும் நோன்புப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
நோன்புப் பெருநாள் குத்பா உரை மற்றும் தொழுகை என்பவற்றை அஷ்ஷெய்க் எம்..ஏ.எம். அனீஸ் (ஜவாதி) நடத்தினார்.
இதேவேளை, பெரும்பாலானோர் நோன்பை பூர்த்தி செய்து, இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025