ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

வை.எம்.எம்.ஏ. புத்தளம் கிளையின் வேண்டுகோளின் பேரில், J யாழ்ப்பாண முஸ்லிம் சங்க (ஐ.இராச்சியம்) அணியினர், புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சக்கரக் கதிரைகள் ஐந்தைக் கையளித்தனர்.
புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சர் என்.நகுலநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் முஹம்மது சபீக் (நிர்வாக உத்தியோகத்தர்), யாழ்ப்பாண முஸ்லிம் சங்கம் (ஐ.இராச்சியம்) அமைப்பின் தலைவர் எம்.எம்.கியாஸ், அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகளான எம்.எம். கையிஸ், எம்.உஸ்மான், வை.எம்.எம்.ஏ. புத்தளம் பணிப்பாளர் எம்.ரி.எம்.நபீல், வை.எம்.எம்.ஏ. புத்தளம் தலைவர் எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி, செயலாளர் முஜாஹித் நிசார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, யாழ்ப்பாண முஸ்லிம் சங்கம் (ஐ.இராச்சியம்) அமைப்பின் தலைவர் எம்.எம். கியாஸ் , குறித்த சக்கரக் கதிரைகள் ஐந்தையும், புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் வைத்திய பணிப்பாளர் டொக்டர் என்.நகுலனாதன் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் முஹம்மது சபீக் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
29 minute ago
34 minute ago
43 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
43 minute ago
57 minute ago