முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 07 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனமடு பங்கதெனிய வீதியின் முதலக்குளி பௌத்த விகாரைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் பலத்த காயங்களோடு, ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார் என, ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் உடஹேனகம கொடவேகர எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். ஹேரத்ஹாமி (வயது 48) என்பவரே உயிரிழந்தவராவார்.
பங்கதெனிய திசையிலிருந்து ஆனமடு திசையில் பயணித்த பெண்ணொருவரால் செலுத்திச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள், வீதியின் ஊடாக மாறிக் கொண்டிருந்தவர் மீது மோதியே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலம், ஆனமடு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனை இன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இவ்விபத்தின் பின்னர் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண், ஆனமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஆனமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
32 minute ago
39 minute ago