Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 21 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடப்பு பிரதேசத்தில் வைத்து சந்தேகத்துக்கிடமான முச்சக்கரவண்டியை, செவ்வாய்க்கிழமை சோதனைக்குட்படுத்திய போது, முச்சக்கரவண்டியில் இருந்தவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதில் பயணித்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தைச் சேர்ந்த மூவரும் கம்பஹாவைச் சேர்ந்த ஒருவருமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் நான்கும் 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டும், முந்தல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், அலைபேசிகள் 3 மற்றும் முச்சக்கரவண்டி என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள், போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி, உடப்பு பிரதேசத்திலுள்ள கடைகளில் சில பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக முந்தல் பொலிஸாருக்குக் கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போதே, இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025