2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் சாஹிராவின் பரிசளிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸின் ரஸ்மின்

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருனாகரன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஜனாப் , முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பாடசாலைக்கு விடுமுறையின்றி வருகை தந்த மாணவர்கள், வகுப்பறையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள், மாகாணம், தேசிய ரீதியில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகள் என்பனவற்றில் பிரகாசித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் எனப் பலரும் அதிதிகளினால் நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X