2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் விஞ்ஞானக் கல்லூரியில் மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின் எம்.யூ.எம்.சனூன், முஹம்மது முஸப்பிர்

புத்தளம் விஞ்ஞானக் கல்லூரியில் இரு மாடிக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று புதன்கிழமை (23) வைபவரீதியாக நடைபெற்றது.

குறித்த விஞ்ஞானக் கல்லூரிக்கு, இரு மாடிக் கட்டடமொன்றை பெற்றுத்தருமாறு, கல்லூரி நிர்வாகமும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரும் மதுரங்கிளியிலுள்ள மேர்சி லங்கா நிறுவனத்தனரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளுக்கிணங்க, குவைத் நாட்டின் ஸக்காத் நிறுவனத்தின் அனுசரணையில் மேர்சி லங்கா நிறுவனம் 13 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்லூரி அதிபர் முஹம்மது சிராஜுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மதுரங்குளி மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நஸ்ர் ஹசன், பிரதிப் பணிப்பாளர் அப்துல்லாஹ் முனீர், நிர்வாக செயலாளர் அஷ்ஷெய்க் ஹசன் சியாத் (நளீமி), திட்ட முகாமையாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ் (நளீமி), மேர்சி கல்வி வளாக  பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பௌசுர் ரஹ்மான் (நளீமி), வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.எம்.முஹ்சி, ஏ.ஓ.அலிகான் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X