Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூன் 26 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் தனது மகனை அடித்துக்கொலை செய்த சந்தேகநபரான தந்தையை, எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
புத்தளம் தில்லையடியைச் சேர்ந்த பீ.கே.என்டன் மலிக் (வயது 24) எனும் இளைஞனே, இத்தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்காக அவருக்கு சகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் உயிரிழந்த இளைஞனின் தந்தை, பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை (23) அதிகாலை, தனக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில், பொல் ஒன்றினால் தன்னை மகன் தாக்கிக் காயப்படுத்தினார் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகனுடைய தாக்குதலை தாங்க முடியாத நான் பக்கத்திலிருந்த ரீப்பைத் துண்டு ஒன்றை எடுத்து மகனை பதிலுக்கு அடித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் எதுவுமே தெரியாது. பின்னர் வைத்தியசாலையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான் நான் அடித்து மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் என, கொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தை பொலிஸூக்கு வழங்கிய வாக்குமூலத்தில் மேலும் கூறியுள்ளார்.
குறித்த தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக காயத்துக்குள்ளான இருவரும், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொலை செய்யப்பட்ட இளைஞனனின் தந்தை, சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் முன்னிலையில் சனிக்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது கொலைசெய்யப்பட்ட தனது மகனின் சடலத்தைப் பார்த்து தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும், கொலைசெய்யப்பட்ட இளைஞனின் தந்தை பதில் நீதிவானிடம் மன்றாடியுள்ளார்.
இதனையடுத்து, மகனின் சடலத்தைப் பார்ப்பதற்கு சந்தேகநபருக்கு 15 நிமிடங்கள் அவகாசம் வழங்குமாறு, பொலிஸாருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
50 minute ago
1 hours ago