2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவன் முதலிடம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம், மணல் குன்று முஸ்லிம் வித்தியாலய மாணவன் எம்.என்.ஏ.அஸ்ஹர், புலமைப்பரீட்சைப் பெறுபேறுகளில் 191 புள்ளிகளை பெற்று புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பிடித்துகொண்டுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் மணல் குன்று முஸ்லிம் வித்தியாலயம் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 2013ஆம் ஆண்டு இப்பாடசாலையின் மாணவி எம்.எப்.எம். பஸ்லா 184 புள்ளிகளை பெற்று முதல் நிலையை அடைந்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகளின் பிரகாரம் 77.01 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் அதிபர் எம்.எச்.எம். ராசிக், 47.8 சதவீத மாணவர்கள் பிரபல பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இம்மாணவன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை அடைவதற்கு காரணமாக இருந்த அதிபர் எம்.எச்.எம். ராசிக் மற்றும் ஆசிரியர்களான ஓ.ஜவாஹிரா, எம்.என்.எம். ரஸ்மீனியா, வீ.லோகேஸ்வரி ஆகியோருக்கு பெற்றோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இம்மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருவதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .