2025 மே 05, திங்கட்கிழமை

மதுபானம் தயாரித்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளுஓயா - மஹிமாஎளிய பிரதேசத்தில், சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட இருவரை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட பதில் நீதவான், ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

முந்தல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், சனிக்கிழமை(28) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், கொச்சிக்கடை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 64 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X