2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கட்டிக்குளம் கிராமத்தில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 26, 38, 56 வயதுகளையுடைய 3 பேரை, சனிக்கிழமை (28) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், மதுபானம் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும்  லொறி ஒன்றையும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு, இச்சந்தேகநபர்களைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X