Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 14 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, மழை வேண்டி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள விஷேட தொழுகை, புத்தளம் இஜ்திமா மைதானத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெறவுள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் மழையின்மை காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும், பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், கால்நடைகளும் உணவு, நீரின்றிக் கஷ்டப்படுகின்றன.
எனவே, நாட்டில் வரட்சி நீங்க, மழை தேடி தொழுகைக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பன அறிவித்துள்ளன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட தொழுகையில் ஆண்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
தொழுகைக்கு சமூகமளிப்பவர்கள் வுளு செய்து, தொழுகை விரிப்புடன் ( முஸல்லா) வருகை தருமாறும், கால்நடைகள் உள்ளவர்கள் தமது கால்நடைகளையும் தொழுகை இடம்பெறும் மைதானத்திற்கு கொண்டு வருமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அத்துடன், மழை தேடி தொழுகை நடைபெறும் வரை அதிகமாக (இஸ்திஃபார்) பாவமன்னிப்பு தேடுவதுடன், முடியுமானவர்கள், நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .