ஹிரான் பிரியங்கர / 2017 ஜூன் 21 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மான் இறைச்சியுடன் நால்வரும் மயில் இறைச்சியுடன் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, புத்தளம் செல்லம்குந்தல் காட்டுப் பகுதியில், இன்று (21) காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே, மான் இறைச்சியுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டனர் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 35 கிலோகிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டதுடன், இறைச்சியாக்கப்பட்ட மானின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டன.
அவர்கள் 4 பேரையும் கைதுசெய்துகொண்டு திரும்பும்போது கிடைத்த தகவலையடுத்து, கல்லடி, மதுரகம பகுதியில், மயிலை இறைச்சியாக்கி சமைத்துக் கொண்டிருந்த இருவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலைக் கொலைசெய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட போரோ 12 துப்பாக்கியையும் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வெயில் காலம் என்பதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு விலங்குகளே இவ்வாறு கொல்லப்பட்டு, இறைச்சியாக்கப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025