Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 28 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கு எதிராக, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரென, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது தெரிவித்தனர்.
அநுராதபுரம் விமானப் படை முகாம் மீது, விமானம் மற்றும் தரைவழியாக ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே, அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, அநுராதபுரம் இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 16 விமானங்கள் அழிவடைந்ததுடன், பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான பீ.அரவிந்தன் மற்றும் ராசவன்னன் தபோரூபன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
1 hours ago