Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 01 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
“புத்தளம் மீன் சந்தைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இரண்டு யாசகர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கத்திக்குத்துக்கு இலக்காகி அதிலொருவர் படுகாயமடைந்துள்ளார்” என புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன, தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரண்டு யாசகர்களும் ஒரே இடத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியதுடன், அதில் ஒரு யாசகர், மற்றைய யாசகரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கூறிய கத்தியால் கடுமையாக குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான யாசகர், படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, உடனடியாக புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த புத்தளம் பொலிஸார், விசாரணைகளை நடத்தியதுடன், கத்திக்குத்தினை மேற்கொண்டதாக ௯றப்படும் யாசகரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025