Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
சிலாபம், வட்டக்களிப் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு 47 நாட்களின் பின்னர், அக் கொலையுடன் தொடர்புடைய மூவரை, வௌ;வேறு இடங்களில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்துள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
வர்ணகுலசூரிய நிவ்டன் ரோய் பெர்ணான்டோ (வயது 45) என்ற வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தவராவார். இவருக்கு 6 வயதில் மகனும் மகளும் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 25 வருட காலமாக இத்தாலியில் பணியாற்றிவிட்டு, நாடு திரும்பியிருந்த இவர், வட்டிக்குப் பணம் கொடுப்பதையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய மீன் வகைகளை வளர்ப்பதையும் தொழிலாகச் செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி, இவரை விட்டுப் பிரிந்து, கண்டிப் பிரதேசத்தில் வசித்து வருவதோடு, கொலை செய்யப்பட்டவருடன் விவாகரத்துக் கோரி, கண்டி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் தெரிய வந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது பிள்ளைகள் இருவருடனும் தனது இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டில் வசித்து வந்த நிலையில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகரின் கொலை தொடர்பில், சிலாபம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் பல தகவல்களையும் பெற்றிருந்துள்ளனர்.
தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுள் சிலர் மீது, கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் உள்ளதென்றும், அவர்கள் கொள்ளைச் சம்பவங்களுக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லும் சில ஆயுதங்கள், ஒரு சோடி கைவிலங்கு என்பவற்றுடன் அவர்களின் மூன்று வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கொலையின் பின்னர் இவர்கள் சோமாவதி தேவாலயத்துக்குச் சென்று, அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக, வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையங்களில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவ்வாறான மூன்று வாகனங்களே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago