முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 13 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் கடற்படைப் பிரிவுக்குரிய கடற்படையினரும் புத்தளம் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மயக்கமடைவதற்காகப் பயன்படுத்தப்படும் 1,000 வலி நிவாரண மாத்திரைகளுடன், நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நுரைச்சோலை பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால், இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், இம்மாத்திரைகளைப் பல பிரதேசங்களில் விநியோகித்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, அந்நபரை, நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
26 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago