2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுக்கடன் வழங்கிவைப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 02 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசதி குறைந்த குடும்பங்கள், தங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வு, ஆனமடுவில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்வீட்டுக்கடன் வழங்கும் திட்டம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்படுகின்றது. நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் அழைப்பின்  பேரில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பயனாளர்களுக்கான கடன்களை வழங்கிவைத்தார்.

அத்துடன், மேசன் தொழில் செய்பவர்களுக்காக அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு வரும் “சில்ப சவிய” வேலைதத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு, பயிற்சிகளை நிறைவு செய்த 125 மேசன்களுக்கு, அத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன. அத்தோடு, தமது வசிப்பிடங்களுக்கு காணி உறுதிகள் இல்லாத 35 பேருக்கான காணி உறுதிகளும், அமைச்சரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X