Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 மே 16 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பரவில மற்றும் போலவத்தை பிரதேசங்களுக்கிடையில் வைத்து வான் ஒன்றை மறித்துள்ள கும்பல்லொன்று, வானின் சாரதியைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த 20,000 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய எம். எம். முஹம்மது பஸ்லின் என்பவர் காயங்களுடன், நீர்கோழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், தனது வானை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நுவரெலிவுக்கு சுற்றுலா சென்றதாகவும் அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இவ்வாறு சிலர் தனது வானை மறித்து தன்னைத் தாக்கிவிட்டு பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் சம்பவத்துக்கு முகங்கொடுத்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தன்னைத் தாக்கிய கும்பலில் ஐந்து பேர் இருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காண முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், அவர்களைக் கைதுசெய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
2 hours ago