2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுதிவயல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளுதிவயல் கரம்பை வீதியில் புளுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் விருதோடை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உமர் பாச்சா உஸ்மான் (வயது 39) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் தனது மோட்டார் சைக்கிளில் விருதோடை திசையிலிருந்து வந்து கொண்டிருக்கையில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே மணல் ஏற்றிக் கொண்டு வந்துள்ள கெண்டர் ரக லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சடலம், புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் லொறியை சுற்றிவளைத்தால் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவ்விடத்துக்கு விரைந்த புத்தளம் பொலிஸார் நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு, லொறியின் சாரதியையும் கைதுசெய்தனர். லொறியும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X